Article Top Ad
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) வழங்கும் புதிய ‘FIFA சமாதான விருது’ இந்த ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் முதலாவது பெறுநராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2026 FIFA உலகக் கிண்ணக் காலிறுதி அணிக் குழு முன்னுரிமை குலுக்கல் அமெரிக்காவின் வொஷிங்டனில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்றபோது, FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ இந்த விருதை டிரம்ப்பிடம் வழங்கினார்.
சமாதானத்திற்காக விசேட மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் மற்றும் உலக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர்கள் ஆகியோருக்கே இந்த விருது வழங்கப்படுகிறது என FIFA குறிப்பிட்டுள்ளது.

