தரவு சேகரிப்பில் மக்களின் பங்கேற்பு முக்கியம் – பிரதமர்

0
113
Article Top Ad

நாடு அனர்த்தத்துக்குப் பின் மீளெழுச்சியை நோக்கி முன்னேறுவதில், சரியான தரவு சேகரிப்பும், அவற்றை மக்கள் பங்கேற்புடன் சேகரிக்கும் முறைகளும் மிகவும் அவசியமானவை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பிரதமர் இதனை குறிப்பிட்டார். புதிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும்போது தரவுகளை ஒருங்கிணைக்க வழிமுறை இல்லாதிருப்பது பெரிய சவாலாகும் எனவும் தெரிவித்தார்.

அடிமட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பங்கேற்கும் தரவு சேகரிப்பு முறையை உருவாக்குவது அவசியமாகும் என குறிப்பிட்ட பிரதமர், கிராமம் தொடக்கம் பிரதேசம், மாவட்டம் வரை சரியான தகவல்களை சேகரிப்பதற்கான செயன்முறை மிகவும் முக்கியம் என்றார்.