இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவர் பரிந்துரை

0
23
Article Top Ad

இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) என்பவரை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க சிரேஷ்ட வெளிநாட்டு சேவையின் அனுபவம் வாய்ந்த உறுப்பினரான எரிக் மேயர், தற்போது தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இலங்கை உட்பட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் அவர் ஏற்கனவே இருந்துள்ளார்.

எரிக் மேயர் இதற்கு முன்னர் நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும், வட மாசிடோனியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தூதுவராகப் பணியாற்றிய ஜூலி சங் (Julie Chung), நேற்றுடன் (16) தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெற்றதைத் தொடர்ந்து புதிய நியமனத்திற்கான தேவை எழுந்துள்ளது.