திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் :மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

0
67
Article Top Ad

திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஜனவரி 19ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பணிப்புரையின் எழுத்துப்பூர்வ கட்டளை மற்றும் ஒலிப்பதிவு என்பவற்றை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

பௌத்த பிக்குகளான பலாங்கொட கசப்ப தேரர் மற்றும் மற்றொரு பிக்கு ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் எடுத்த தீர்மானம் குறித்தே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு வினவியுள்ளது.

தமது விளக்கமறியல் உத்தரவுக்கு சவால் விடுத்து கசிப்ப தேரர் மற்றும் மற்றைய பிக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, இந்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக இன்று பிற்பகல் மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்தது.

கடந்த 2025 நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை போதிராஜ விஹாரையில் கடற்கரை பாதுகாப்புச் சட்டங்களை மீறி புத்தர் சிலையொன்றை வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கசப்ப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு நபர்களை, ஜனவரி 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.