இலங்கையில் உள்ள கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உணவு சேவை உதவியாளர்களாகப் பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கும் புதிய வர்த்தமானி அறிவித்தலை தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாலை 6:00 மணிக்குப் பிறகு கழிப்பறை உதவியாளர்களாக மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய திருத்தத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரவு 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரையிலான காலப்பகுதியில் துப்புரவுப் பணியாளர்களாகவோ அல்லது உணவு வழங்கல் உதவியாளர்களாகவோ பணியில் ஈடுபடுத்தப்பட முடியும்.
அவ்வாறு இரவு நேரப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகள், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த நலன்புரி வசதிகளை உறுதிப்படுத்துவது அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் பொறுப்பு என தொழிலாளர் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்மானம் இலங்கையின் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய பெறுபேறு எனக் கருதப்படுகிறது.

