மியாமியில் காட்சிப்படுத்தப்படவுள்ள ட்ரம்பின் 22 அடி உயர தங்கச் சிலை

0
29
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அடி உயர தங்கச் சிலை மியாமியில் (Miami) உள்ள டோரலில் (Doral) காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மியாமியில் இடம்பெறும் 20 பேர் கொண்ட உச்சிமாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வரும்போது, ​​இந்த சிலை காட்சிப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

அதன் பீடத்தில் இருந்து 22 அடி உயரத்தில் நிற்கும் இந்த தங்கச் சிலையை நிர்மாணிக்க கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளனர்.

குறித்த சிலையை நிர்மாணித்து வரும் சிற்பி ஆலன் கோட்ரில் (Alan Cottrill) சம்பள தகராறு காரணமாக தனது வேலையை பாதியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு $150,000 கமிஷன் வழங்குவதாக பேசப்பட்ட நிலையில், $90,000 நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.