பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் தொடர்பு – இளவரசர் ஆண்ட்ரூக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

0
19
Article Top Ad

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் லண்டன் வந்த இளம் பெண் ஒருவரை முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரிட்டனின் ர ‘Republic’ என்ற அமைப்பு, முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது பொலிஸில் அண்மையில் முறைப்பாடு ஒன்றை அளித்திருந்தது.

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அவர் அரசு ரீதியான ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக இந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

எப்ஸ்டீனின் லோலிடா (Lolita) விமானத்தில் லண்டன் வந்த இளம் பெண்ணை வின்ட்சர் என்ற புனைப்பெயரில் இளவரசர் ஆண்ட்ரூ பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மட்டும் குறித் லோலிடா (Lolita) விமானம் 90 முறை தரையிறங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  2008இல்ல் எப்ஸ்டீன் சிறார் துஸ்பிரயோக வழக்கில் தண்டிக்கப்பட்டதன் பின்னரும் அவரது லோலிடா விமானம் பிரித்தானியாவுக்கு வந்துச் சென்றுள்ளது.

பிரித்தானியாவின் நான்காவது பரபரப்பு மிகுந்த விமான நிலையமான ஸ்டான்ஸ்டெட் இல் லோலிடா விமானம் பலமுறை தரையிறங்கியுள்ளதாகவும்  அங்கிருந்தே ஆண்ட்ரூ உட்பட பலரும் பெண்களை அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன், இதை இதுவரை நடந்த மிகப்பெரிய முறைகேடாக கருதி ஆண்ட்ரூ மீது குற்றவியல் ஸ்காட்லாந்து பொலிஸார் விசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆண்ட்ரூ தொடர்பான விசாரணைகளில் விமானங்களின் முக்கிய ஆதாரங்களை முறையாக சரிபார்க்கவில்லை என்றும் கோர்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.