பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் உயர்வு

0
66
Article Top Ad

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் 2025ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம்  இவ்வாறு உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் 5.1 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பரில் 5.2 வீதமாக அதிகரித்துள்ளது.

18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 14 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 16-17 வயதுடையவர்களிடையே 34.2 சதவீதமாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு தற்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையில், வேலையின்மை விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் சில தாமதமான தீர்மானங்கள் இவ்வாறு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பதில் நிறுவனங்கள் காட்டும் மந்தநிலையும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது வேலையில்லாதவர்கள் வேலை தேடுவதில் தீவிரம் காட்டியுள்ளதாகவும், பணிநீக்கங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.