மனைவியை கொலைசெய்த கணவர் – பிரித்தானியாவில் ஆயுல் தண்டனை

0
54
Article Top Ad

பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட கோபத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

32 வயதுடைய நிரோதா என அழைக்கப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா, கடந்த 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 ஆம் திகதியன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

தமது குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இந்த கொலை வேரகலகே செய்துள்ளதுடன்,  சம்பவ இடத்திலேயே நிரோதா உயிரிழந்துள்ளார்.

கொலைக்குப் பிறகு தனது காரில் வேகமாகத் தப்பிச் சென்றுள்ள வேரகலகே, லொறி ஒன்றின் முன்னால் விழுந்து தற்கொலைக்கு முயன்ற தருணத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் 2022 இல் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ள பின்புலத்திலேயெ இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

நிரோதா தனது சக ஊழியர் ஒருவருடன் தொடர்பை பேணியமையால் கோபமுற்றே இந்த கொலையை குற்றவாளியான வேரகலகே செய்துள்ளதாகவும் காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.