ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் வீடு காவல் நிலையமாக மாறுகிறது

0
23
Article Top Ad

உலகிலேயே மிக மோசமான அதிபராக பார்க்கப்படும் ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீட்டை ஆஸ்திரியா அரசாங்கம் காவல் நிலையமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் என்ற பெயரை கேட்டால் உலகமே நடுங்கும். ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் ஜெர்மனியின் நாஜி கட்சியின் தலைவராக உயர்ந்து 1933 முதல் 1945 வரை சர்வாதிகார ஆட்சி செய்தவர்.

இரண்டாம் உலகப் போரின் போது 60 லட்சம் யூதர்களை கொன்று குவித்தவ்தான் ஹிட்லர்.

அப்படி ஒரு கடும் இனவெறி கொள்கையை கொண்டிருந்த இவர் 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்தபோது ஒரு அறைக்குள் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

1989ம் வருடம் ஏப்ரல் 20 ஆம் திகதி இவர் ஆஸ்திரியாவில் உள்ள பிரணவ் ஆம் இன் நகரில் பிறந்திருந்தார். ஓவியராக முயற்சி செய்து வறுமையில் வாடிய் போது அவருக்கு யூதர்களின் மீது கோபம் வந்தது.

அந்த கோபம் நாளடைவில் வெறுப்பாக மாறியது. அதனால்தான் அவர் அதே யூதர்களை கொன்று குவித்தார் என வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அதனால்தான் உலகிலேயே மோசமான அதிபராக ஹிட்லர் எப்போதும் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரியாவில் பிரணவ் ஆன் இன் நகரத்தில் உள்ள ஹிட்லர் பிறந்த வீட்டை ஆஸ்திரியா அரசு காவல் நிலையமாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

ஹிட்லர் பிறந்த இந்த வீட்டை 216 கோடி செலவில் போலீஸ் நிலையமாக மற்றும் பணிகள் தற்போது தொடங்கி இருக்கிறது.

இதற்கு ஆஸ்திரிய நாட்டு மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஹிட்லர் வீட்டை அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தும் இடமாக மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த விடயத்தில் அரசாங்கம் தற்போது தீவிர கரிசீலனை செலுத்தியுள்ளது.