ஸ்கெட்லாந்தில் எதிர்வரும் மே 7ஆம் திகதி நடைபெறவுள்ள Scottish Parliament தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.
தேர்தல் பிரசாரங்கள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய கட்சிகள் தங்களது கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை முன்வைத்து வாக்காளர்களை ஈர்க்க முயற்சித்து வருகின்றன.
கருத்துக் கணிப்புகளின்படி, Scottish National Party மற்றும் Reform UK ஆகிய கட்சிகளுக்கு இடையில் போட்டி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Reform UK கட்சியின் வளர்ச்சி, பாரம்பரிய அரசியல் அமைப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் தேர்தலில், குடியேற்றக் கொள்கைகள், பொருளாதார நிலைமை, மற்றும் தேசிய அடையாளம் போன்ற முக்கிய பிரச்சினைகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, குடியேற்றத்திற்கு எதிரான Reform UK கட்சியின் நிலைப்பாடுகள் சமூகத்தில் வேறுபட்ட கருத்துக்களை உருவாக்கி, அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து ஸ்கொட்லாந்து வெளியேற வேண்டும் என்ற (independence) கோரிக்கையும் மீண்டும் அரசியல் மேடையில் முக்கிய விவாதமாக உருவெடுத்துள்ளது. சில கட்சிகள் இதனை வலியுறுத்தி வாக்காளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றன.
Reform UK கட்சியின் எழுச்சியும், ஸ்கொட்லாந்தின் எதிர்கால அரசியல் திசை குறித்த விவாதங்களும் இணைந்து, இந்தத் தேர்தலை மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளன.

