பூமிக்கு திரும்பும் ஆர்டெமிஸ் II குழு – விண்வெளி வீரரின் மறைந்த மனைவியின் பெயரில் சந்திரப் பள்ளம் பெயரிட பரிந்துரை

0
6
Article Top Ad

சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு, 2020 ஆம் ஆண்டில் காலமான விண்வெளி வீரர் ரீட் வைஸ்மேனின் மறைந்த மனைவி கரோலின் நினைவாக அவரது பெயரிட விண்வெளி வீரர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஆர்டெமிஸ் II பயணத்தின் போது, விண்கலத்தில் நடைபெற்ற உரையாடலில் இந்த உணர்ச்சிமிக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இன்னொரு பள்ளத்திற்கு “இன்டெக்ரிட்டி” (Integrity) என பெயரிடவும் குழு தீர்மானித்துள்ளது.

இந்தப் பெயர்கள் சர்வதேச வானியல் ஒன்றியத்திடம் (IAU) அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதனிடையே, சந்திரனை நெருங்கி பயணம் செய்த இந்த விண்வெளி வீரர்கள், மனிதர்கள் இதுவரை சென்ற மிக நீண்ட தூர சாதனையை முறியடித்துள்ளனர். அவர்கள் பூமியிலிருந்து சுமார் 406,771 கி.மீ. தூரம் வரை சென்றுள்ளனர்.

சந்திரனின் பின்னால் சென்றபோது, நாசாவுடனான தொடர்பு சுமார் 40 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தொடர்பு கிடைத்ததில் அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரனை நெருங்கிப் பயணித்து, தங்களது விண்கலத்திலிருந்து முழு சூரிய கிரகணத்தைக் கண்டதைத் தொடர்ந்து, ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வரலாற்றுச் சாதனையை பாராட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , விண்வெளி வீரர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார்.

விண்வெளி வீரர்கள் பசிபிக் பெருங்கடலில் வெள்ளிக்கிழமை தரையிறங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here