தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு ; 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு

0
64
Article Top Ad

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்தன.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் குடிநீர், கழி​வறை, தடையற்ற மின்​சா​ரம், அவசர மருத்​து​வம், கைப்​பிடி​யுடன் கூடிய சாய்​வுதளம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சக்கர நாற்​காலி, நிழற்​பந்​தல், வாக்காளர்​களுக்கு உதவ தன்​னார்​வலர்​கள் ஏற்​பாடு என அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்டிருந்தன.

இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்படுத்​தப்​படு​கின்​றன. கூடு​தலாக 20 சதவீத இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் வைக்கப்பட்டிருந்தன.

பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை இராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் இராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

இந்த தேர்தல் தமிழக வரலாற்றில் அதிகமாக வாக்குச் சதவீதம் பதிவான தேர்தலாக இந்த தேர்தல் பதிவாகியுள்ளது.

இம்முறை 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2011ஆம் ஆண்டு 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தமையே அதிக வாக்கு சதவீதமாக இருந்தது.

பிற்பகல் 5 மணி நிலவரப்படி 82 சதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் எதிர்வரும் மே 4ஆம் திகதி வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.