சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
5
Article Top Ad

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துர்பான் நகருக்கு அருகிலுள்ள கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிச்டர் அளவுகோலில் 5.0 புள்ளி ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.55 மணியளவில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வு அருகிலுள்ள பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதுடன்,  இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வெளியேறியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர்சேதம் அல்லது கட்டிட சேதம் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மீட்பு மற்றும் அவசர சேவை அணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷின்ஜியாங் பகுதி புவிச்சரிவு செயற்பாடுகள் அதிகமாக காணப்படும் பிராந்தியங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், இங்கு அடிக்கடி சிறிய மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன.

மேலும், அடுத்த சில மணி நேரங்களில் பிந்தைய அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here