உலக கோப்பை கால்பந்து : அரை இறுதிக்குள் நுழைந்த அர்ஜென்டினா, பிரேசில் அணிகள்!

0
124
Article Top Ad

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு லுசைல் கால்பந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது நிமிடத்தில்அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர் ஜென்டினாவுக்கான 2-வது கோலை அடித்தார். இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது 11 நிமிடங்களில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார்.

கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

இதேவேளை நேற்றிரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியினான பிரேசில் அணி, குரோஷியாவை எதிர் கொண்டது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்ட நிறைவுவரை இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் கூடுதல் ஆட்ட நேரத்தின்போது 106 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்தார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா தரப்பில் புருனோ பெகோவிக் ஒருகோல் அடித்ததால் ஆட்டம் சமனில் ஆடிந்தது. இதையெடுத்து பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.