உள்ளூராட்சி தேர்தல் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை!

0
152
Article Top Ad

உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை என்று நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம் காணப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகளும் தேர்தல் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம்பெறமாட்டா” – என்றார்.