Article Top Ad
உலகில் கொவிட்-19 னால் அதாவது கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15.11 கோடியை கடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 12.84 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இதேவேளை வைரஸ் தொற்றினால் உலகளவில் இதுவரை 31.78 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 1.89 கோடிக்கும் அதிகமானோர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
. இதில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.