ரணிலுக்கு மஹிந்த வழங்கிய வாக்குறுதி!

0
147
Article Top Ad

“புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன்; தலையிடவும் மாட்டேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச.

ரணிலுக்கு மஹிந்தவுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இருவரும் தற்போதைய அரசியல், பொருளாதார விடங்கள் பற்றிப் பேசினர்.

அப்போது புதிய அமைச்சரவை நியமனம் பற்றியும் பேசப்பட்டது.

“புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன்; தலையிடவும் மாட்டேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நியமியுங்கள்” – என்று கூறினார் மஹிந்த.