செல்லுபடியாகும் விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அபராதம்!

0
83
Article Top Ad

இலங்கைவரும் வெளிநாட்டினர் செல்லுபடியாகும் விசாக் காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தால் விசா கட்டணத்துடன் கூடுதலாக 500 டொலர்கள் அபராதத்தை விதிக்க பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விசாவின் காலம் முடிந்து 07 நாட்களுக்கும் மற்றும் 14 நாட்களுக்கும் இடையில் தங்கியிருந்தால் 250 டொலர்களும் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் 500 டொலர்களும் அபராதம் விதிக்கப்படும்.

இந்த உத்தரவுகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.