அஸ்வின் தவறவிட்ட டெஸ்ட் தொடர் ஆட்ட நாயகன் சாதனை !

இன்றைய தினம் போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருது Man of the Series வழங்கப்பட்டிருந்தால் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலேயே அதிக தொடர் சிறப்பாட்டக்காரர் விருதைப் பெற்றவீரர் என்ற சாதனையை முத்தையா முரளிதரனுடன் அஸ்வின் பகிர்ந்துகொண்டிருப்பார்.முரளிதரன் 11 தடவைகள் டெஸ்ட் தொடரின் சிறப்பாட்டக்காரராக தேர்வாகியுள்ளார். ஆனால் முரளிதரன் ஒட்டுமொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார். அஸ்வின் இதுவரை 10 முறை டெஸ்ட் தொடர் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றுள்ளார். ஆனால் இதுவரை அஸ்வின் 94 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
159
Article Top Ad

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே ட்ரினிடாட் அன்டுபாக்கோவிலுள்ள போர்ட் ஒவ் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

போட்டியின் நான்காம் நாளான நேற்றையதினதில் சில மணி நேரங்கள் மழையால் பாதிக்கப்பட்ட அதேவேளை ஐந்தாவதும் இறுதியுமான தினமான இன்று எவ்வித பந்தும் வீசப்படாத நிலையில் கடும் மழைகாரணமாக ஆட்டம் கைவிடப்பட்டமை காரணமாகவே போட்டி ட்ராவில் நிறைவுபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக முதல் இனிங்ஸில் சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கட்டுக்களைக் கைப்பற்றிய மொஹமட் சிராஜ் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் வெற்றிபெற்ற காரணத்தினாலேயே மழையால் இரண்டாவது போட்டிய வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தபோதும் 1ற்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்வதற்கு வழிவகுத்தது.

முதலாவது போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தமாக 12 விக்கட்டுக்களை வீழ்த்திய போதும் அறிமுக ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஜஸஸ்வி ஜெய்ஸ்வால் குவித்த அபாரமான 187 ஓட்டங்கள் கன்னிச் சதத்திற்காக போட்டியின் சிறப்பாட்டக்காரராக தேர்வானார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச் சதத்தைக் குவித்ததுடன் மொத்தமாக மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினார். இந்த வகையில் தொடரில் ஒட்டுமொத்தமாக 15 விக்கட்டுக்களையும் ஒரு அரைச் சதத்தையும் பெற்றிருந்தார் அஸ்வின் .

ஆனாலும் துரதிஸ்டவசமாக போட்டியின் இறுதிநாள் முற்றாக மழைகாரணமாக கைவிடப்பட்டமையால் விருது வழங்கலின் போது போட்டியின் Man of the Match சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரில் வெற்றி பெற்ற அணிக்கான பரிசுகளே வழங்கப்பட்டன. போட்டித்தொடரின் சிறப்பாட்டக்காரருக்கான Man of the Series விருது வழங்கப்படவில்லை.

இன்றைய தினம் போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருது Man of the Series வழங்கப்பட்டிருந்தால் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலேயே அதிக தொடர் சிறப்பாட்டக்காரர் விருதைப் பெற்றவீரர் என்ற சாதனையை முத்தையா முரளிதரனுடன் அஸ்வின் பகிர்ந்துகொண்டிருப்பார்.

முரளிதரன் 11 தடவைகள் டெஸ்ட் தொடரின் சிறப்பாட்டக்காரராக தேர்வாகியுள்ளார். ஆனால் முரளிதரன் ஒட்டுமொத்தமாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார். அஸ்வின் இதுவரை 10 முறை டெஸ்ட் தொடர் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றுள்ளார். ஆனால் இதுவரை அஸ்வின் 94 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.