வெற்றியாளர்கள் இல்லாத நிலையில் 34,000 கோடிகளைக் கடந்த அமெரிக்க லொத்தர் பரிசுத்தொகை!

இலங்கை நாணயத்தில் இதன் பெறுமதி 3,460,694,153,452 ஆகும் .அதாவது 34 ஆயிரம் கோடி ரூபா ஆகும்.இந்திய ரூபா மதிப்பில் இந்தபரிசுத்தொகையின் எண்ணிக்கை 8,600 கோடி ரூபா ஆகும்.

0
137
Article Top Ad

ஒவ்வொரு நாடுகளில் அதிர்ஷ்ட லாபச் சீட்டு ‘லொத்தர்’ பரிசுகளை வெற்றிகொள்வதற்காக தினமும் கோடிக்கணக்கானவர்கள் அவற்றைக் கொள்வனவு செய்து வருகின்றார்கள். அந்தவகையில் அமெரிக்காவில் “Mega Millions” என்ற லொத்தர் மக்களிடையே பெரும் பிரபலமானது.

கடந்த வெள்ளிக்கிழமை லொத்தர் சீட்டிழுப்பின் போது தெரிவான ஆறு இலக்கங்களுக்கான வெற்றிச் சீட்டு இல்லாத காரணத்தால் அதன் ஒட்டுமொத்த தொகை 1.05 பில்லியன் Billion அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது.

இலங்கை நாணயத்தில் இதன் பெறுமதி 3,460,694,153,452 ஆகும் .அதாவது 34 ஆயிரம் கோடி ரூபா ஆகும்.இந்திய ரூபா மதிப்பில் இந்தபரிசுத்தொகையின் எண்ணிக்கை 8,600 கோடி ரூபா ஆகும்.

கடந்த வெள்ளிக்கிழமை லொத்தர் குலுக்கலில் விழுந்த எண்கள் 5, 10, 28, 52, 63 ஆகவும் Mega Ball எண் 18 ஆகவும் காணப்பட்டது. ஆனால் எவருக்கும் இந்த வெற்றிச் சீட்டு கிடைக்கவில்லை .

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் இடம்பெறவிருக்கும் லொத்தர் குலுக்கலில் வெற்றி பெறுபவர் தனது பரிசை 29 ஆண்டுகளுக்கான வருடாந்த கொடுப்பனவாக பெற்றுக்கொள்ளமுடியும் அன்றேல் வரிக்கட்டணங்கள் நீங்க ஓரே தடவையில் ஒட்டுமொத்தமாக 527.9 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

அமெரிக்க லொத்தர் வரலாற்றில் இதுவரை வெல்லப்பட்ட அதிகபட்ச பரிசாக 1.537 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது.இந்தத் தொகை 2018ம் ஆண்டு சவுத் கரோலினா மாநிலத்தில் ஒருவருக்கு கிடைத்தது.