விம்பிள்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் நொவாக் ஜோகோவிச்சைத் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் டென்னிஸ் விளையாட்டுலக விற்பன்னர்களதும் ரசிகர்களதும் பேரபிமானத்திற்குரிய இளம் வீரராக திகழ்பர் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ்.
The moment Tommy Paul defeated the world no.1 🤯#NBO23 @TommyPaul1 pic.twitter.com/hBv0UbgpAQ
— Tennis TV (@TennisTV) August 12, 2023
இந்தாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான US Open அமெரிக்க பகிரங்க போட்டிகள் அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிலையில் கடந்தாண்டு சம்பியனான அல்கரஸ் அதிக வெற்றிவாய்ப்பிற்குரிய வீரராக கணிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அமெரிக்க போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறும் Canada Open கனேடிய ஒபன் டென்னிஸ் சுற்றுப்போட்டியின் காலிறுதியாட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Tommy's Time! ⏰
Tommy Paul defeats Alcaraz 6-3 4-6 6-3 to advance into a first ATP Masters 1000 semi-final of 2023#NBO23 pic.twitter.com/B1f4oUf3cM
— Tennis TV (@TennisTV) August 12, 2023
இதில் அல்கரஸ் அமெரிக்க வீரர் டொம்மி போல் என்பவரை எதிர்கொண்டார் . இதில் 6ற்கு 3 4ற்கு6 6ற்கு 3 என்ற செட்கணக்கில் டொம்மி போல் வெற்றிபெற்றார். அல்கரஸின் தோல்வி டென்னிஸ் உலக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்திருக்கும் என்றால் மிகையல்ல.