இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்கிறது இலங்கை!

0
72
Article Top Ad

2023 – 2025ஆம் காலப்பகுதிக்கான இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பின் (Indian Ocean Rim Association – IORA) தலைமைப் தலைமை பொறுப்பை, இலங்கை ஏற்கவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் அமைப்பின் 23ஆவது அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளது.

அமைப்பின் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக, மூத்த அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டம் நடைபெறும்.

IORA தலைவர் பதவியை இலங்கை ஏற்கும் இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்னர் 2003 முதல் 2004 வரை தலைமை பதவியை இலங்கை வகித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பு என்பது இந்தியப் பெருங்கடலின் 23 கரையோர நாடுகளை ஒன்றிணைக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பில் 11 உரையாடல் பங்குதாரர்களும் உள்ளனர்.

இலங்கை அந்த அமைப்பின் ஸ்தாபக உறுப்புரிமை கொண்ட நாடாகும். இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பு 2022 இல் அதன் 25ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடியது.

இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பின் அமைச்சரவை மிக உயர்ந்த முடிவெடுகளை எடுக்கிறது.

இலங்கையின் தலைமைத்துவத்தை ஏற்கும் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமைச்சர்கள் குழுவின் தலைவராக செயல்படுவார்.

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக IORA மூத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.

‘பிராந்திய கட்டடக்கலையை வலுப்படுத்துதல்: இந்தியப் பெருங்கடல் அடையாளத்தை வலுப்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற உள்ளது.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமொரோஸ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமன், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன், சீனா, எகிப்து, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, துர்க்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும்.

இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பின் முதன்மை நோக்கங்களாக பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துதல், நிலையான வளர்ச்சியை எளிதாக்குதல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வசதி உள்ளிட்ட பல முக்கிய விடயங்களில் கவனம் செலுத்துகிறது.

மீன்வள மேலாண்மை, இடர் அபாயத்தைக் குறைத்தல், கல்வி மற்றும் அறிவியல் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்தும் ரிம் அமைப்பு கவனம் செலுத்துகிறது.