‘பட்ஜெட்’ இல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

0
101
Article Top Ad

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

தனியார் துறையினரும் இந்தத் தீர்மானத்தை பின்பற்ற முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் ஜனாதிபதியால் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்ற உள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.