கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நவம்பர் மூன்றாம் வாரத்தில் மீள ஆரம்பம்

0
118
Article Top Ad

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த மாதம் 15ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் தொடர் அகழ்வுப் பணிகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீள ஆரம்பமாகுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அதன் ஒருபகுதியாக ஒன்பது நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 17 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த பேராசிரியர் ராஜ் சோமரட்ணவுக்கு நேரமின்மையால் தற்காலிகமாக அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அகழ்வுப் பணியானது எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.