நடப்பு உலகக் கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி 2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
ஹகமதாபாத் – நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
241 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ராவிஸ் ஹெட் 137 ஓட்டங்களையும், மார்னஸ் லாபுசான் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் இந்தியா எந்தப் போட்டியிலும் தோல்வியை சந்தித்திராத நிலையில், இறுதிப் போட்டியில் படு தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டி; இந்திய அணி 240 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு
2023 உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் இந்தியா அணி 240 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
ஹகமதாபாத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசியது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் கே.எல் ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 54 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரோகித் சர்மா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முதல் 10 ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பின்னர் பெறும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஒரு கட்டத்தில் 97 பந்துகளுக்கு எந்தவொரு நான்கு அல்லது ஆறு ஓட்டங்களை அடிக்க முடியாது இந்திய வீரர்கள் தடுமாறியிருந்தனர்.
இந்தனைக்கும் களத்தில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் களத்தில் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்திய வீரர்களை சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தனர்.
மிச்சர் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.