அதிவேக நெடுஞ்சாலைகளில் பணியில் ஈடுபடும் அதிரடிப் படையினர் நீக்கம்: அமைச்சர் டிரான் அதிரடி

0
61
Article Top Ad

அதிவேக நெடுஞ்சாலைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினரை (STF) அங்கிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிாரன் அலஸ் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் விசேட அதிரடிப்படையினரை நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

விசேட அதிரடிப்படையினர் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் தீ மற்றும் விபத்துக்களில் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும், 330 நாட்களில் 164 தடவைகள் மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 175 அதிரடிப்படையினரை பராமரிப்பதற்கு 260 மில்லியன் அரச நிதி செலவிடப்படுகிறது. அங்கிருந்து அகற்றப்படும் இவர்கள் நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

“அதிரடிப்படையினருக்கான 2,300 காலியிடங்கள் உள்ளன. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் நோக்கத்திற்காக அதிரடிப்படையினர் அவசியமாக உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.