பிரித்தானிய இளவரசி இலங்கை வருகிறார்

0
67
Article Top Ad

ஐக்கிய இராச்சியத்தின் இளவரசி அன்னே (Princess Anne) எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இளவரசி அன்னே இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார்.

அவருடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸும் இலங்கை வரவுள்ளார்.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பிரகாரமே இளவரசி அன்னே இலங்கை வரவுள்ளார்.

இளவரசி அன்னே, இரண்டாம் எலிசபெத் இளவரசி மற்றும் எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப் ஆகியோருக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. அத்துடன், ஒரே மகள் மற்றும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் ஒரே சகோதரியும் ஆவார்.

இளவரசி அன்னே, தமது இலங்கை விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.