வற் வரி குறித்து பொய் கூறினால் சட்டம் கடுமையாக்கப்படும்: இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை

0
71
Article Top Ad

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் வற் செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றி நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற விசேட வற் வரி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொண்ட போது நிதி இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“பாவனையாளர்களிடம் போலியான பட்டியல்களை வழங்கி இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்த சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்.

இதற்கிடையில், எதிர்காலத்தில் வரி தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, மேலும் நேரடி வரியின் சதவீதம் 40 வீதமாக அதிகரிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

“இந்த நேரம் ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் பொருளாதார மட்டத்தைப் பொருட்படுத்தாமல் மிகவும் கடினமான நேரம் என்று சொல்ல வேண்டும். ஒவ்வொருவரின் வருமானம் குறைந்து, செலவுகள் அதிகரித்துள்ளதால், சிரமங்கள் எழுந்துள்ளன.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினையை புரிந்து கொண்டு அரசாங்கம் இதற்காக முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை தவிர வேறு வழியில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும்.

அதற்கான வரி தளத்தை விரிவுபடுத்த அரசு முயற்சித்து வருகிறது. அதில், இதுவரை 20 வீதமாக இருந்த நேரடி வரி, படிப்படியாக 30 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நேரடி வரியை மேலும் 40 வீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில் மறைமுக வரிகளின் சதவீதத்தை குறைக்கும் திறன் அரசுக்கு உள்ளது.

அத்துடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் போலியான பட்டியல்களை பாவனையாளர்களிடம் வழங்கி அநியாய இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாகத் தடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.