இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உண்மையில் குறைவடைகின்றதா?

0
268
Article Top Ad

மே மாதத்தில் தொடக்கத்தில் தொடர்ச்சியாக பல நாட்கள் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்திருந்த இந்தியாவில் கடந்த மே 8 திகதிக்குப் பின்னர் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைந்துவருதனை உத்தியோகபூர்வ தரவுகள் காண்பிக்கின்றன.

ஆனால் இந்தியாவில் உண்மையான நிலைவரமோ பல மடங்காக இருப்பதாக பல தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. அரசாங்கம் தினந்தோறும் கண்டறியப்படும் தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையை மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் அதிகமாக உள்ளன.

கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 இலட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில்இ தொற்றுக்கு உள்ளான 36 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் 4 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்துஇ இந்தியாவில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 2 இலட்சத்து 70 ஆயிரத்து 319 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.