Article Top Ad
டென்மார்க்கிற்கு எதிரான பயங்கரவாத அச்சறுத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸிற்கு எதிரான இஸ்ரேல் போர் மற்றும் கடந்த வருடம் இஸ்லாமிய புனித நூலான் குரான் எரிப்பு என்பன டென்மார்க் மீது வெளிநாட்டில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அதன் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையான பேற் (PET) தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அச்சுறுத்தல் அளவுமட்டமானது எதிர்பாராதளவிற்கு அதிகரித்துள்ளதாக பேற் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக டென்மார்க் மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும் பேற் தெரிவித்துள்ளது.