நேபாளத்தில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள்: பாகிஸ்தானியர்கள் நால்வர் கைது

0
92
Article Top Ad

இலங்கை பிரஜைகள் நால்வரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி குறித்த இலங்கையர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேபாள பொலிஸாருக்கு அந்நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய இரகசிய தகவலுக்கமைய பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதான பாகிஸ்தான் பிரஜைகள் 42 முதல் 62 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த இலங்கையர்கள் நால்வரிடமிருந்து மில்லியன் கணக்கான பணம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர்கள் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காத்மண்டுவில் உள்ள பல்வேறு விடுதிகளில் சந்தேகநபர்கள் குறித்த இலங்கையர்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்ததுடன் அவர்களது கடவுச்சீட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.