இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகும் ஈரான்

0
60
Article Top Ad

இஸ்ரேல் – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை ஒரு போருக்கு வழிவக்கும் சூழலை நோக்கி நகர்ந்துள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்த நிலைமை போருக்கான சூழல் ஏற்படுத்தியுள்ளது.

மாறி மாறி இருநாடுகளும் சில குறிப்பிட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து இந்த நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதுடன், விரைவில் அடுத்தகட்ட தாக்குதலை நடத்த ஈரான் தயாராகிவிட்டது.

ஈரானும் இஸ்ரேலும் நிழல் போரிலிருந்து நேரடி மோதலுக்கு நகர்வதால் வாஷிங்டன் இராணுவ ரீதியான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாகவும் ரொய்ட்டர்ச் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் ஒரு பெரிய, நீடித்த மத்திய கிழக்கு மோதலுக்கு தம்மை தயார்ப்படுத்தவில்லை எனக் கூறும் அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள், அமெரிக்க படைகள் மற்றும் குடி மக்கள் மீது ஈரான் மத்திய கிழக்கில் தாக்குதல்களை தொடுத்தல் ஈரானுக்கு பதிலடியை கொடுக்கும் தயார்ப்படுத்தல்களை பென்டகன் நகரும் எனவும் கூறியுள்ளனர்.

“எங்கள் படைகள் தாக்கப்படும்போது, ​​எங்கள் மக்கள் கொல்லப்படும்போது அமெரிக்கா அதற்கு பதிலளிக்கும்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் NBC க்கு தெரிவித்துள்ளார்.