ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் மே 1 ஆம் திகதி மதியம் 2 மணிமுதல் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், இந்த மே தின கூட்டத்தில் தென்னிந்திய பிரபலங்கள் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.
இலங்கையை பொறுத்தவரை மே தினம் என்பது, மிகவும் புரட்சிகரமாகவும் அரசியல் பிரமுகர்களின் காரசாரமான உரைகளுடனும் தான் இருக்கும்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் தென்னிந்திய பிரபலங்களின் வருகையானது பொதுமக்களை அங்கு வரவழைப்பதற்கான யுக்தியாகவே பார்க்கப்படுகின்றது.
மேலும், சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான விமர்சனங்களும் மேலோங்கியுள்ளது.
தென்னிந்திய பிரபலங்களை கொண்டு விசேட இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ள நிலையில், இந்நிகழ்வை இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமொன்று அனுசரணை வழங்குகின்றது.
1990 ஆம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரேமதாச மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை மே தினத்துக்கு அழைத்து வந்திருந்தார்.
அதற்குப் பின்னர் தற்போது இந்திய தென்னந்திய பிரபலங்கள் இவ்வாறான மேதினக் கூட்டங்களுக்கு வருகை தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.