இலங்கையில் இன்று இதுவரை 3,538 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றுடன் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் 3000ற்கு அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த மூன்றுநாட்களிலும் மொத்தமாக 10000ற்கு அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58ஆயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 828 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில் மொத்தமாக ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 360 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 89ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் 31ஆயிரத்து 875 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14 இலட்சத்து 25 ஆயிரத்து 556 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 16ஆயிரத்து 134பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது