இலங்கையில் 100 ஒக்டேன் பெட்ரோல் அறிமுகம்

0
182
Article Top Ad

வாகனங்கள், குறிப்பாக உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் XP100 தரமதிப்பீட்டு எரிபொருள் எனப்படும் 100 ஒக்டேன் பிரீமியர் பெட்ரோல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 100 ஒக்டேன் பிரீமியர் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை சாதாரண எரிபொருள் விலையைவிட மிக அதிகமாக இருக்குமென இந்தியன் ஒயில் கோப்பரேஷனின் (IOC) நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 793 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வகை எரிபொருளை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 18 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து (JNPT) எரிபொருள் இருப்பு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் இந்த எரிபொருளானது வாகனத்தின் செயற்திறன் மற்றும் நீண்ட எஞ்சின் ஆயுளை அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், குறைந்தளவான கார்பன் உமிழ்வுடன் ஆரோக்கியமான மற்றும் தூய்மையான சூழலுக்கு பங்களிப்பு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.