இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களை இலக்கு வைத்த இஸ்ரேல்: பரிதாபமாக உயிரிழக்கும் குடும்பங்கள்

0
53
Article Top Ad

இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் என்று தெரிந்தும் இலக்கு வைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் மேற்கொள்வதாக குற்றம் சுமத்தக்கப்பட்டுள்ளது.

நகரின் தால் அல்-ஹவா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னர் சுமார் 60 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா நகரில் இஸ்ரேலியப் படைகள் “திட்டமிட்ட படுகொலைகளை” நடத்தியதாக காசா அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் இஸ்மாயில் அல்-தவாப்தா தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பஸ்தர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என் காசாவின் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து தற்போது வரை போர் நீடித்து வருகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் இதுவரை 38,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 88,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.