Article Top Ad
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் லூசியாவைச் சேர்ந்த ஜூலியன் ஆல்ஃபிரட் வெற்றிபெற்றுள்ளார்.
நேற்று இரவு நடந்த இந்தப் போட்டியில் அவர் ஓட்ட தூரத்தை 10.72 வினாடிகளில் ஓடிமுடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
23 வயதில் தங்கப் பதக்கம் வென்ற ஜூலியன் ஆல்ஃபிரட், கரீபியன் தீவான செயின்ட் லூசியாவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் உலக சாம்பியன் என்ற பெருமையை பெற்ற அமெரிக்காவின் ஷகாரி ரிச்சர்ட்சன் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார்.
அவர் ஓட்ட தூரத்தை 10.87 வினாடிகளில் ஓடிமுடித்திருந்தார். அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் 10.92 வினாடிகளில் ஓடி வெங்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.