ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய கூட்டணி

0
40
Article Top Ad

ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்வதற்காக வரலாற்றில் முதன்முறையாக பிரதான கட்சிகள் ஒரே மேடையில் இணைந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

வரலாற்றில் முதன்முறையாக பிரதான கட்சிகள் சில ஒரே மேடையில் ஜனாதிபதி சார்பாக முன்னிலையாகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நாம் கடந்த தேர்தல்களில் நாம் வெவ்வேறாக இணைந்து செயற்பட்டோம். ஆனால் இம்முறை நாம் ஒன்றாக இணைந்துள்ளோம்.

எதிர்வரும் தேர்தலில் நடப்பு அரசாங்கத்தின் ஜனாதிபதி சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

தமது அரசியல் கட்சி எதுவாக இருந்தாலும் தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெற செய்வதற்கு ஆதரவு வழங்க முடியும்.

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் தரப்பினருடன் நாம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய கூட்டணியை உருவாக்குவோம்.

பொதுஜன பெரமுனவை உருவாக்குவதற்கு கட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்களே ஒத்துழைப்பு வழங்கினர்.பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்றே எண்ணுகின்றனர்.

பொதுஜன பெரமுனவுடன் எமக்கு எந்தவித முரண்பாடும் இல்லை. ஆனால் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்காதிருக்கவே தீர்மானித்தோம்.

ஏனெனில் நெருக்கடியில் இருந்த நாட்டை மீட்டெடுத்து இன்று இந்த நாட்டில் மக்கள் ஓரளவேனும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க ஆவாா்” என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தொிவித்தாா்.