பிரேசிலில் எக்ஸ் வலைத்தளம் முடக்கம்: நீதிபதியை வார்த்தைகளால் தாக்கும் மஸ்க்

0
20
Article Top Ad

எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை நியமிக்காமையால் பிரேசிலில் எக்ஸ் வலைத்தளம் தடை செய்யப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை எக்ஸ் என பெயர் மாற்றிய உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். கொள்கைளில் பல திருத்தங்களை மேற்கொண்டார்

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக எக்ஸ் காணப்பட்டது. அண்மையில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடினார்.

இதன்போது ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த பிரேசில் உச்ச நீதிமன்றம், அந்நாட்டில் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.

தற்போது பிரேசிலில் எக்ஸ் வலைத்தளம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சுதந்திரமான பேச்சு ஜனநாயகத்தின் அடித்தளம் மற்றும் பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார் என எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார்.