இலங்கையின் உள்விவகாரங்களில் ஒருபோதும் தலையிடமாட்டோம்: ரசியா அறிவிப்பு

0
32
Article Top Ad

உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடப் போவதில்லை என இலங்கைக்கான ரசிய தூதுவர் லெவன் ட்ஜகார்யன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களுடனும், புதிய அரசாங்கத்துடனும் தமது நாடு இணைந்து பணியாற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“உள்நாட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை உங்கள் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிப்போம், உங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடனும் நாங்கள் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்.

“அடுத்த அரசாங்கம் நடுநிலை மற்றும் நட்புறவு கொள்கையை தமது நாட்டுடன் தொடரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நடுநிலையான வெளியுறவுக் கொள்கைக்கு பாராட்டு தெரிவித்த அவர், இந்த அணுகுமுறையை மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை உள்ளிட்ட எங்களுக்கு அதிகளவான நட்பு நாடுகள் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை அரசாங்கத்தின் நடுநிலையான கொள்கைக்காக எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.