Article Top Ad
நியூஸிலாந்து தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரம் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், நியூசிலாந்தின் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பார்.
அவற்றில் ஒன்று எதிர்வரும் செப்டெம்வர் 9 அன்று, இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் தொடங்கும் ஆப்கானிஸ்தானுடனான போட்டியாகும்.
மற்றையது இலங்கை அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும்.
இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரங்கன ஹேரத் 433 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், நொய்டாவில் நடக்கும் ஒரே டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைந்துள்ளார்.