தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சம்பியன் ஆனது நியூஸிலாந்து மகளிர் அணி!

0
3
Article Top Ad

2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணியானது சாம்பியன் ஆனது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20)இரவு நடந்த இறுதிப் போட்டியில் சோஃபி டெவின் தலைமையிலான நியூஸிலாந்து அணி, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர், இறுதியாக நியூஸிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்ற தருணம் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து, ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண வெற்றியாளர்களான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தவுகள் அணிகள் அடங்கிய பட்டியலில் புதிதாக இணைந்தது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றது.

அமெலியா கெர் 43 ஓட்டங்களையும், ப்ரூக் ஹாலிடே 38 ஓட்டங்களையும் மற்றும் சுசி பேட்ஸ் 32 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பின்னர், 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெத்தாடிய தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 126 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இதன் மூலம் நியூஸிலாந்து 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகியாகவும், தொடரின் ஆட்டநாயகியாகவும் அமெலியா கெர் தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here