இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை : அமெரிக்கத் தூதுவர்

0
10
Article Top Ad

அறுகம்பே பகுதிக்கு விடப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

அறுகம்பே பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,

அறுகம்பே பகுதியில் குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காணப்படுவதாக தகவல் கிடைத்த சந்தர்ப்பத்தில், அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்தோம்.

அதற்கு அவர்கள் விரைவாக பதிலளித்தனர்.

தொடர்ச்சியாக அன்றாடம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தலைமைத்துவத்துடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.

எவ்வாறெனினும், இலங்கைக்கான பயண ஆலோசனை தொடர்பான சில பிழையான தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here