ஜஸ்டின் ட்ரூடோ தோல்வியைடைவார்: எலான் மஸ்க் கணிப்பு

0
7
Article Top Ad

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் தேர்தலில் தோல்வியடைவார் என உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க் கணித்துள்ளார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘ஜேர்மனியில் சோசலிச அரசாங்கம் வீழ்ச்சி அடைந்து வருவதாக சமூகவலைதளத்தில் பயனர் ஒருவர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில் ,’கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் தேர்தலில் காணாமற் போய்விடுவார்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஒரு பயனர், ‘எலான் மஸ்க் கனடாவில் ட்ரூடோவை அகற்றுவதற்கு உங்கள் உதவி தேவை’ என கேலியாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டணி கட்சிகளும் விலகுவதாக கூறி, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

2013 ஆம் ஆண்டிலிருந்து லிபரல் கட்சியை வழிநடத்தி வரும் ட்ரூடோவுக்கு எதிர்வரும்வரும் தேர்தல் சவாலாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அவர் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் அபாயம் இருக்கிறது என அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here