புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள்

0
9
Article Top Ad

புதிய பாராளுமன்றத்தில ஆவது பாராளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.

தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தை சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டில் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார். ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழர் ஒருவருக்கு தேசிய பட்டியலில் இடமளித்தால் அமையவுள்ள நாடாளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிப்பார்கள். ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காவிட்டால் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை 27 ஆக அமையும்.

2020 பொதுத்தேர்தலில் மக்கள் ஆணைமூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர். தேசிய பட்டியல் ஊடாக மூவருக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் கடந்த நாடாளுமன்றத்திலும் 29 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள் விபரம் –

🛑 இலங்கை தமிழரசுக் கட்சி – 08

✌️ சிவஞானம் சிறிதரன் (யாழ்ப்பாணம்)- 32,833

✌️ இரா. சாணக்கியன் (மட்டக்களப்பு)- 65,458

✌️ ஞானமுத்து ஸ்ரீநேசன் (மட்டக்களப்பு)- 22,773

✌️ இளையதம்பி சிறிநாத் (மட்டக்களப்பு) – 21,202

✌️ குகதாசன் (திருகோணமலை) – 18,470

✌️ துரைராசா ரவிகரன் (வன்னி) -11,215

✌️ கே. கோடீஸ்வரன் – 11,962

✌️ பா. சத்தியலிங்கம் (தேசிய பட்டியல்)

🛑 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 01

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின்கீழ் இதொகா வேட்பாளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டனர். ஜீவன் தொண்டமான் 46,438 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். (கடந்த பொதுத்தேர்தலில் இதொகாவுக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. )

🛑 தமிழ் முற்போக்கு கூட்டணி – 02

பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு நுவரெலியாவில் மாத்திரமே இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

✌️ பழனி திகாம்பரம் (நுவரெலியா) – 48,018

✌️ வீ. இராதாகிருஷ்ணன் (நுவரெலியா) – 42,273

( கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக ஆறு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.)

🛑 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 01

✌️ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) – 15,135

🛑 சுயேச்சைக்குழு 17 – 01

✌️ இராமநாதன் அர்ச்சுனா (யாழ்ப்பாணம்) – 20,487

🛑 சங்கு – 01

✌️ செல்வம் அடைக்கலநாதன் வன்னி – 5,695

🛑 தேசிய மக்கள் சக்தி – 13

✌️ கிட்ணன் செல்வராஜா (பதுளை) – 60,041

✌️ அம்பிகா சாமுவேல் (பதுளை) – 58, 201

✌️ கே. பிரபு (மட்டக்களப்பு) – 14,856

✌️ கே.இளங்குமாரன் (யாழ்ப்பாணம்) – 32,102

✌️ எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா (யாழ்ப்பாணம்) – 20,430

✌️ மூர்த்தி ரஜீவன் (யாழ்ப்பாணம்) – 17,579

✌️ சரோஜா போல்ராஜ் (மாத்தறை) – 148,379

✌️ கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா) – 33,346

✌️ எஸ். பிரதீப் – 112,711 (இரத்தினபுரி)

✌️ அருன் ஹேமச்சந்திர ( திருமலை) – 38,368

✌️ செல்வதம்பி திலகநாதன் (வன்னி) – 10,652

✌️ ஜெகதீஸ்வரன் – 9,280 (வன்னி)

✌️ இராமலிங்கம் சந்திரசேகர் (தேசிய பட்டியல்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here