6 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

0
153
Article Top Ad

கடந்த வாரம் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் வெளிவந்த படம் கங்குவா. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சிலர் இப்படத்திற்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதற்கு, நடிகை ஜோதிகா பதிலடி கொடுத்த பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். முதல் நாள் கங்குவா படத்தின் வசூல் உச்சத்தில் இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில் 6 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவா திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 95 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.