விமானத்தில் இலங்கையர் ஒருவரால் பெண் ஒருவருக்கு அசௌகரியம் – 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

0
9
Article Top Ad

கொழும்பிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் பெண் ஒருவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்
இலங்கையர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

41 வயதான குறித்த இலங்கையர், நேற்றைய தினம் விமானத்தில் பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொள்ள முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று (19) ப்ரோட்மீடொவ்ஸ் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரது வழக்கு மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 07 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here