அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக நண்பர்களான சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதன்படி,செவ்வாய்க்கிழமை முதல் கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 வீத வரி விதிப்பும், சீனா மீது 10% வரியும் அமெரிக்கா விதிக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனேடிய எரிசக்தி 10 வீத குறைந்த வரி விதிப்பை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குறித்த மூன்று நாடுகளும் அவதானம் செலுத்தாவிட்டால் இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கனடாவும் மெக்சிகோவும் தங்களுக்கான பதிலடி வரி விதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகள் அவ்வாறு பதிலடி கொடுத்தால் வரிகளை மேலும் அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த எச்சரிக்கை தொடர்பில் குறித்த நாடுகள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை உலக நாடுகள் அவதானித்து வருகின்றன.