யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை : விமானங்களை அதிகரிக்க இண்டிகோ முடிவு

0
12
Article Top Ad

சென்னையிலிருந்து – யாழ்ப்பாணம் பலாலி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தீர்மானித்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஐந்து நாட்களுக்கு ஒரு விமானத்தை இயக்குகிறது.

இந்த நிலையில், தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகளின் பிரகாரம் எதிர்காலத்தில் மேலும் இரண்டு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் (Alliance Air) விமான சேவை நிறுவனம் அண்மையில் இடைநிறுத்தியிருந்தது.

தற்போது யாழ்ப்பாணம் – சென்னைக்கான விமான சேவையை இன்டிக்கோ எயார் நிறுவனம் மட்டுமே நடத்தி வருகிறது.

இண்டிகோ நிறுவனம் எடுத்துள்ள இந்த தீர்மானம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடான விமான போக்குவரத்தை விரிவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையிலான விமான சேவை கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here